
ஜூன் 27, சென்னை (Health Tips): இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூபில் ரீல்ஸ் போன்ற சிறிய அளவிலான காணொளிகளை நீண்ட நேரம் பார்ப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச அளவில் சுமார் 200 கோடி நபர்களால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் செயலியை 73 கோடிக்கும் அதிகமானோர் ரீல்ஸ்க்காக மட்டும் பார்க்கின்றனர். இன்ஸ்டா பயனர்களின் செயல்பாடுகளை மேம்படுத்த ரீல்ஸ் விஷயங்களில் மெட்டா நிறுவனமும் பல புதுப்பிப்புகளை கொண்டு வந்துள்ளது. Cleaning Tips: பிரிட்ஜில் ஒரே துர்நாற்றமா? இதை கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்.. நறுமணம் வீசும்.!
அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனை :
இதனிடையே அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால் கண்கள் உலர்ந்து போதல், கிட்ட பார்வை, மாறுகண் பிரச்சனை அதிகம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இளம் தலைமுறை இதில் அதிகநேரம் செலவிடுவதால் இவர்கள் கட்டாயம் இது தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கின்றனர். ரீல்ஸ்-ன் காட்சிகள், அதனை எடுத்துரைக்கும் நபரின் உரையாடல் போன்றவை பலரும் அந்த விஷயத்துக்கு அடிமையாக காரணமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கண்களை சிமிட்டும் விகிதம் குறைவதால் கண்ணீர் சுரப்பு பாதிக்கப்படுகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.