School Boy Murder: 9 வயது சிறுவன் கொலை வழக்கு; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.. நடந்தது என்ன..?
உத்தர பிரதேசத்தில் பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்பதற்காக 9 வயது சிறுவனை கொலை செய்த சக மாணவர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 28, ஹத்ராஸ் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் (Hathras) மாவட்டத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி இப்பள்ளியில் படிக்கும் 9 வயது சிறுவனின் உடல், அப்பள்ளி தலைமை ஆசிரியருடைய காரில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். Heavy Snowfall: கடும் பனிப்பொழிவு; சிக்கி தவித்த 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு..!
விசாரணையில் திடீர் திருப்பம்:
இதன் விசாரணையில், எந்தவித தகவலும் கிடைக்காத காரணத்தினால், பள்ளியில் பயின்று வரும் மாணவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், 13 வயது மாணவர் ஒருவர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்பதற்காக 9 வயது சிறுவனை, அந்த மாணவன் துண்டை வைத்து கழுத்தை நெறித்து கொலை (Murder) செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
சிறுவன் கொலை வழக்கு:
இதனைத் தொடர்ந்து, மாணவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் நடந்த சம்பவத்தை காவல்துறையினர் முடிவு செய்தனர். அதன் பின்னர், அந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்து அவரை சீர்திருத்தப் பள்ளியில் கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.