ஏப்ரல் 14, ராசிபுரம் (Namakkal News): நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் (Rasipuram) பேருந்து நிலையத்தில் இருந்து, அரசுப் பேருந்து ஒன்று சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை பாலச்சந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார். சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தொடர்ந்து அரசுப் பேருந்து ராசிபுரம் ஆர்டிஓ அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் முன் சக்கரம் கழண்டு ஓடியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்.. கள்ளக்காதலி கட்டிப்பிடித்து எரித்துக்கொலை.. சென்னையில் பயங்கரம்.!
கழண்டு ஓடிய பேருந்தின் முன் சக்கரம்:
உடனடியாக, பேருந்து ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தினார். பேருந்தின் முன் சக்கரம், அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தது. இதனால் பேருந்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேருந்தின் சக்கரத்தை மீண்டும் பேருந்தில் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பயணித்த பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.