Chennai Ennore Illicit Affair Murder Case (Photo Credit: @Dinathanthi / Pixabay)

ஏப்ரல் 13, எர்ணாவூர் (Chennai News): சென்னையில் உள்ள எர்ணாவூர், சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் அபிபுல்லா (வயது 50). இவரின் மனைவி நூரிஷா (வயது 42). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் வசித்தபோது, நூரிஷா - ஆட்டோ ஓட்டுனர் டெல்லி பாபு (வயது 47) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே, விஷயம் அபிபுல்லாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் 3 மாதங்களுக்கு முன்பு வீடு காலி செய்து எர்ணாவூர் பகுதிக்கு குடியேறியுள்ளனர். இதனால் கள்ளக்காதல் ஜோடி நேரில் சந்திக்க இயலாமல் தவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி டெல்லிபாபு நூரிஷாவின் வீட்டுக்கு வந்து, என்னை ஏன் தவிர்க்கிறாய்? என கேட்டுள்ளார். அப்போது, நூரிஷா உன்னுடன் பேச எனக்கு விருப்பம் இல்லை. எனது வாழ்க்கையில் தலையிடாமல் இரு என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. Shocking Video: ராட்டினத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.. திருவிழாவில் அசம்பாவிதம்.! 

கள்ளக்காதலி எரித்துக்கொலை:

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த டெல்லிபாபு, தான் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்தார். பின் நூரிஷாவையும் கட்டிப்பிடித்தார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். மகளை காப்பாற்ற வந்த நூரிஷாவின் தாய் ஜெனிமா (வயது 80) தீக்காயத்துடன் பாதிக்கப்பட்டார். இதனால் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்து எண்ணூர் காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நூரிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.