Heavy Snowfall in Himachal Pradesh (Photo Credit: @DeepakYadav_4U X)

டிசம்பர் 28, குலு (Himachal Pradesh News): இமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன்காரணமாக, போக்குவரத்து முடங்கியது. அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது. அதேநேரத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் (Tourists) அங்கு சென்றுள்ளனர். சிம்லா, மணாலி உள்ளிட்ட பல பகுதிகள் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்கின்றனர். Road Accident: தடுப்புச் சுவரில் பைக் மோதி இருவர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

கடும் பனிப்பொழிவு:

குலுவில் உள்ள சோலாங் நாலா என்ற பகுதியில் கடும் பனிப்பொழிவு (Snowfall) நிலவி வரும் நிலையில், சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கையில், பனிப்பொழிவு காரணமாக 1000 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற வாகனங்கள் சோலாங் பகுதியில் சிக்கிக்கொண்டன. இந்த வாகனங்களில் சுமார் 5,000 சுற்றுலா பயணிகள் இருந்தனர். தற்போது, வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

கடும் பனிப்பொழிவால் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள்: