ஏப்ரல் 14, லக்னோ (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற டெல்லி-மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இறுதியில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது. இதன் வாயிலாக நடப்பு தொடரில் தோல்வியே காணாத டெல்லி அணிக்கு முதல் தோல்வி மும்பையின் வெற்றியால் பரிசாக கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (Lucknow Super Giants Vs Chennai Super Kings IPL 2025) அணிகள் மோதுகின்றன. Virat Kohli: விராட் கோலி & பில் சால்ட் வெறியாட்டம்.. அசத்தல் வெற்றி அடைந்த பெங்களூர் அணி..!

சூப்பர் ஜெயிண்ட்ஸ் எதிர் சூப்பர் கிங்ஸ் (Super Giants Vs Super Kings 2025):
இன்று இரவு 07:30 மணிக்கு தொடங்கி நடைபெறும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்றுள்ள லக்னோ அணியும், 6 போட்டியில் முதல் போட்டியைத் தவிர பிற எந்த போட்டியிலும் வெற்றி அடையாத சென்னை அணி புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கிறது. இரண்டு அணிகளும் இன்று மோதுகிறது. மும்பை அணி தனது தோல்விக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்ததைப்போல, இன்று சென்னை அணி வெற்றி அடையுமா? எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.