ஏப்ரல் 14, காஸ்கஞ்ச் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் (Kasganj) மாவட்டத்தில் பெண் ஒருவர், தனது வருங்கால கணவருடன் பைக்கில் சுற்றுலாத் தலமான நடராய் ஜால் பாலத்தைப் பார்வையிடச் சென்றார். அங்கு சந்தையில் இருந்து திரும்பும்போது, வழிமறித்த இளைஞர்கள், ஆபாசமான வார்த்தைகளால் பேசத் தொடங்கினர். பின்னர், அவர்கள் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். தனது வருங்கால கணவர் கண்முன்னே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. Woman Murder: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பெண் கொடூர கொலை.. ரியல் எஸ்டேட் உரிமையாளர் வெறிச்செயல்..!
8 பேர் கைது:
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அகிலேஷ் பிரதாப் சிங் என்ற ஏபிஎஸ் கப்பர், அமித், சத்யபால், அஜய், ரிங்கு, சவுரப், பிரஜேஷ், சோனு ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இதுகுறித்த விசாரணயில், குற்றம் சாட்டப்பட்ட அவர்கள், தனியாக வரும் பெண்களிடமும் இதே போன்ற செயல்களை தொடர்ந்து செய்வதாக வாக்குமூலம் அளித்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3