CPR Treatment For Old Man: விமான நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர்; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெண் மருத்துவர்.. வீடியோ வைரல்..!
டெல்லி விமான நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவருக்கு, பெண் மருத்துவர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜூலை 19, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 17) நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் டெல்லி விமான நிலையம் அருகில் இருக்கும் ஃபுட் கோர்ட் அருகில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு (Heart Attack) வந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். Military Airfields In Lakshadweep: லட்சத்தீவுகளில் ராணுவ விமானப்படைத்தளங்கள் அமைக்க இந்திய அரசு ஒப்புதல்..!
இதனைப் பார்த்து, விமான நிலையத்தின் டெர்மினல் 2-யில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர், உடனடியாக முதியவருக்கு சிபிஆர் (CPR Treatment) சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளார். மேலும், முதியவர் கண் விழிக்கும் வரை தொடர்ந்து அவருடன் இருந்து, அவருக்கு நம்பிக்கை தரும்படி பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, விமானநிலைய ஊழியர்களின் உதவியால் அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.