Minor Girl Forced Marriage: பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் - பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்கு..!
ஏப்ரல் 05, திருவனந்தபுரம் (Kerala News): தமிழகத்தில் உள்ள மதுரையை சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோருடன், கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு கிழக்குமலை பகுதியில் வசித்து வந்துள்ளார். சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், மாங்காவு பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருடன் சிறுமியை திருமணம் (Minor Girl Marriage) முடித்து வைத்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி அங்குள்ள வார்டு கவுன்சிலர் சத்திய பாமாவிடம், தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் என்றும், தனது படிப்பை தொடர தனக்கு உதவி செய்யுமாறும் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். Sweet Mango Pickle: சுவைமிக்க, இனிப்பான மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது..? – விவரம் உள்ளே..!
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், சட்ட சேவைகள் ஆணைய தன்னார்வ தொண்டர் அவர்களிடம் உதவி கேட்டு, அவர் மூலமாக காவல்துறையினரிடம் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமிக்கு கட்டாய திருமணம் அவரது பெற்றோர் மற்றும் சிலரால் செய்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், இதில் சம்மந்தபட்ட சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகியோர் மீது இலத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை வெள்ளிமடு குன்று பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, அதன் பிறகு தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.