ஏப்ரல் 05, சென்னை (Kitchen Tips): கோடைகாலத்தில் மாங்காய் சீசன் தொடங்கிவிட்ட நிலையில், மாங்காய் மற்றும் மாம்பழம் கொண்டு பலவிதமான சமையல் முறைகள் உள்ளன. அந்தவகையில், மாங்காயை கொண்டு இனிப்பான மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். Hostel Roof Collapse: மேற்கூரை இடிந்து விபத்து; பள்ளி மாணவிகள் 5 பேர் படுகாயம்..!

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய மாங்காய் - 2 கப்

சர்க்கரை - 2 கப்

மிளகாய்த்தூள் - 4 கரண்டி

வறுத்த சீரகம் (எண்ணெய் சேர்க்காமல்) - 4 கரண்டி

கசகசா தூள் - 2 கரண்டி

உப்பு - 2 கரண்டி

செய்முறை:

முதலில் மாங்காயை எடுத்து துருவிக்கொள்ள வேண்டும். பின், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், கடுகு தாளித்து பின்னர் அதோடு துருவிய மாங்காயை சேர்த்து, நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு, மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு, வறுத்த சீரக தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அப்போது சர்க்கரையுடன் மாங்காய் கலந்து ஜாம் பதத்தில் இறக்கவும். பலமாதங்கள் கெடாமல் இருக்கக்கூடிய, இனிப்பு மாங்காய் ஊறுகாயை சப்பாத்தி, பூரி ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.