Teenager Stabs His Sisters: சகோதரியின் திருமணத்தை தடுக்க சதிகாரனாக அண்ணன்; நடந்த படுபயங்கர சம்பவம்..!

பீகாரில் வாலிபர் ஒருவர் சகோதரியின் திருமணத்தை தடுக்க, தனது இரு சகோதரிகளையும் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Knife (Photo Credit: Pixabay)

ஜூன் 08, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவின் ராம்ஜி சக் பகுதியில் கோவிந்த் குமார் என்பவர், தனது இரு சகோதரிகளை கத்தியால் (Stabbing) குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில், அவர்கள் இருவரும் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கத்தியால் குத்திய நபர் தனது இருசகோதரிகளையும் அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்தது. SL Vs BAN Highlights: விறுவிறுப்பான ஆட்டத்தில் வங்காளதேசம் த்ரில் வெற்றி; அடுத்தடுத்து தோல்வியை தழுவிய இலங்கை அணி..!

இதுதொடர்பாக, டிஎஸ்பி தினேஷ்குமார் பாண்டே கூறுகையில், 'கோவிந்த்குமார், தனது இரு சகோதரிகளையும் பல முறை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்தவர்களை பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், தலைமறைவாகியுள்ள கோவிந்த்குமாரை தேடி வருகின்றோம்' என கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கோவிந்த்குமாரின் இளைய சகோதரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரது திருமணத்தை தடுக்கும் முயற்சியில், அவரது வருங்கால கணவருக்கு ஆபாசமான தகவல்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, தகராறில் ஈடுபட்டு, கத்தியால் குத்தியுள்ளது தெரியவந்தது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement