Youth Arrested For Printing Fake Currency: வீட்டில் கள்ளநோட்டுகளை அச்சடித்த இருவர் கைது; சுமார் 3.42 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்..!

பஞ்சாப்பில் 22 வயது வாலிபர் தனது பப்ஜி நண்பரின் உதவியோடு, சுமார் 3.42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வீட்டில் அச்சடித்ததற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Money (Photo Credit: PTI)

ஆகஸ்ட் 12, பெரோஸ்பூர் (Punjab News): பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் (Firozpur) மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர், தனது வீட்டில் போலி இந்திய ரூபாய் நோட்டுகளை (Fake Currency) அச்சடித்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கடந்த ஆகஸ்ட் 02-ஆம் தேதி அன்று காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், பெரோஸ்பூர் காவல்துறையினர் அவரிடம் இருந்து 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3.42 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளனர். அவர் பப்ஜி (PUBG) பயனரின் உதவியைப் பெற்று, போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ள ஆன்லைனில் பல வீடியோக்களைப் பார்த்துள்ளது தெரியவந்தது. Doctor Rape And Murder Case: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவர் கொலை.. இந்தியா முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம்..!

இந்நிலையில், ஏகேஏ ராஜன் என அடையாளம் காணப்பட்ட வாலிபர், தனது பக்கத்து வீட்டு நண்பர் ஆகாஷ்தீப் சிங்குடன் சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். ராஜன், ஆகாஷ்தீப்புக்கு 500 ரூபாய் நோட்டை, 50,000 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை வழங்கினார். ஆகாஷ்தீப் அதனை சூதாட்டக்காரர்களிடையே பயன்படுத்த முயன்றார். அப்போது, அவை கள்ள நோட்டுகள் என்று கண்டறியப்பட்டது. இதனிடையே, ராஜன் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து, பெரோஸ்பூர் குற்றப் புலனாய்வு துறையின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் மோஹித் தவான் கூறுகையில், 'ராஜன் பப்ஜி கேம்களை விளையாடுபவர். மேலும், அஜித் என்ற பயனர் பெயருடன் கள்ள நோட்டுகளை அச்சிடுவது குறித்து சக பயனருடன் பேசியுள்ளார்.

மேலும், அவர் பிளிப்காரட்டிலிருந்து (Flipkart) HP Smart Tank 580 பிரிண்டரை சுமார் 14,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இது உயர் GSM காகிதத்தைப் பிரிப்பதன் மூலம் பாதுகாப்பு நூல்களைச் சேர்ப்பதிலும் அவர் பரிசோதனை செய்தார். அவரிடமும் இருந்து கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் பாதுகாப்பு நூல்கள் இல்லை. ஆனால், அவை நன்கு வடிவமைக்கப்பட்டு சரியான வண்ணத்தில் இருந்தன' என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கள்ளநோட்டுகளை அச்சிட்ட குற்றத்திற்காக ராஜன் மீது பிரிவு 178, 180 மற்றும் 181 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளியான பக்கத்து வீட்டுக்காரரான ஆகாஷ்தீப் சிங்கும் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.