ஆகஸ்ட் 12, புதுடெல்லி (New Delhi): மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (வயது 28) கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார். இவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனையில், பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.
மருத்துவர் கொலை: இந்த வழக்கில் (Doctor Rape And Murder) முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சஞ்சய் ராய். நேற்று கைது செய்யப்பட்ட இவர், விசாரிக்கப்பட்டு வருகிறார். சஞ்சய் ராயுக்கு 4 முறை திருமணம் நடந்துள்ளதாகவும் அவரின் மோசமான நடத்தை காரணமாக 3 மனைவிகள் விட்டு சென்றதகாகவும், நான்காவது மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. Married Woman Gang Raped: காதல் விவகாரத்தில், இளைஞரின் சகோதரி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..!
மருத்துவர்கள் போராட்டம்: பலர் குற்றம் நடந்த மருத்துவமனைக்கு, இனிமேல் நைட் டியூட்டிக்கு வரமாட்டோம் என்று முழக்கமிட்டுக் கொண்டே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஊர்வலமாக வந்தனர். மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. மருத்துவமனையில் ஐசியூ பிரிவை தவிர, மற்ற டாக்டர்கள் எல்லாருமே போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
Students at RG Kar Medical College and Hospital & Vivekananda Institute of Medical Sciences protest against the shocking case of alleged brutal rape and murder of a doctor and post-graduate medical student at RG Kar Medical College & Hospital.
The student had gone to rest… pic.twitter.com/8ir2RbKFc3
— Saurabh Gupta(Micky) (@MickyGupta84) August 10, 2024