Young Girl Hanging Suicide: செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்து, படிக்க சொன்னதால் இளம்பெண் தற்கொலை..!
செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 08, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள புறநகர் பகுதியில் நெலமங்களா தாலுகாவில் உள்ள திப்பகொண்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி நாராயண் - சுதா. இவர்களுக்கு லிகிதா (வயது 18) என்ற மகள் உள்ளார். இவர் தினமும் செல்போன் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அவரது பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். Minor Girl Rape: இசை வகுப்பிற்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம்; இசை ஆசிரியர் போக்சோவில் கைது..!
இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் லிகிதாவிடம், செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, புத்தகத்தை எடுத்து படி என்று கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், வீட்டின் அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாமல் இருப்பதைக்கண்டு, பெற்றோர் சந்தேகப்பட்டு அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அவர் தூக்கில் பிணமாக (Hanging Suicide) தொங்கியுள்ளார். இதனை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.
இதனையடுத்து, நெலமங்களா புறநகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், விரைந்து வந்த காவல்துறையினர் லிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். செல்போன் பார்ப்பதை கண்டித்ததால், இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.