Minor Girl Rape: இசை வகுப்பிற்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம்; இசை ஆசிரியர் போக்சோவில் கைது..!
நீலகிரியில் இசை பயிற்சி வகுப்பிற்கு சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இசை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மே 08, நீலகிரி (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருடைய தந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், இவரது தாய் வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னர், தனது தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் இவர் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். Man Died after Slapping Several Times: வழிவிடும் தகராறில் வாக்குவாதம்; கன்னத்தில் பளார் வாங்கிய இளைஞர் மர்ம மரணம்.. பெங்களூரில் அதிர்ச்சி.!
இந்நிலையில், சிறுமிக்கு இசை பயிற்சி பெற வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. இதனால், பெற்றோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறுமியை அருவங்காட்டில் உள்ள இசை வகுப்பில் (Music Class) சேர்த்து விட்டனர். அங்கு, இசை ஆசிரியராக உள்ள பிரசாந்த் செபாஸ்டியன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து இதுபோல், பலமுறை மற்ற மாணவர்கள் இல்லாத நேரத்தில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 3-ஆம் தேதி அன்று சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, சிறுமியை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில், சிறுமி 9 வாரம் கர்ப்பம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, குன்னூர் மகளிர் காவல்துறையினரிடன் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், விசாரணையில் பிரசாந்த் செபாஸ்டியன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
(The above story first appeared on LatestLY on May 08, 2024 10:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

