Farmers Strike in Bangalore: தீவிரமாகும் காவிரி போராட்டம்: விவசாயி தற்கொலை முயற்சி, கன்னட அமைப்பினர் கைது: பெங்களூரில் பதட்டம்.!
தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5000 கன அடி நீர் திறந்துவிட வலியுறுத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகாவின் நீர் பாதுகாப்பு அமைப்பினர் பெங்களூரில் பந்த் நடத்துகின்றனர்.
செப்டம்பர் 26, பெங்களூர் (Karnataka News): இன்று கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவின் விவசாயிகள் அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு சார்பில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அப்பகுதியில் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக பெங்களூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. Theni Shocker: அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் படுத்த படுக்கையாக கட்டிடத்தொழிலாளி; தேனியில் நடந்த பகீர் சம்பவம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!
பெங்களூரில் சுதந்திரப் பூங்காவில் (Freedom Park) மட்டுமே விவசாய அமைப்பினருக்கு பந்த் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனால் தடையை மீறி டவுன்ஹால் பகுதியில் போராட்டத்தை நடத்திய கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
சுதந்திரப் பூங்காவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் மண்பாண்டம் மற்றும் குடங்களை வைத்து விவசாய அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் சுதந்திரப் பூங்காவில் போராட்டத்தின் போது விவசாயி ஒருவர் துண்டை வைத்து மரத்தில் தூக்கிட முயற்சி செய்தது அங்கே மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் இருந்து பெங்களூர் சென்ற பேருந்துகள் கர்நாடக எல்லையான ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சரக்கு லாரிகளும் மாநிலத்திற்குள் நுழையாமல் அணிவகுத்து நின்று கொண்டிருக்கிறது.
பெங்களூர் மாநகரத்தின் காவல்துறையினர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.