செப்டம்பர் 26, தேனி (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலத்தில், ஆட்சியரை சந்திக்க சம்பவத்தன்று 2 பெண்கள் வந்திருந்தனர். அவர்களின் உறவினர் என ஒருவர் ஆட்டோவுக்குள் படுத்து இருந்தார். இவர்கள் ஆட்சியரை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடையே தாங்கள் வந்த காரணத்தை பதிவு செய்தனர்.

அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்ராஜ் (வயது 40). இவரின் மனைவி ஆதிபராசக்தி. ராம்ராஜின் சகோதரி மகேஸ்வரி. ராம்ராஜ் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், அவர் சமீபத்தில் பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக கை-கால்கள் செயலிழந்து, சுயநினைவின்றி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. கட்டிட தொழிலாளியான ராம்ராஜ், 2018ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. Khalistan Supporters Burn Indian Flag: இந்திய தேசியக்கொடி, பிரதமர் மோடியின் உருவ பொம்மையில் எச்சில் துப்பி, தீவைத்து கொளுத்திய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்: கனடாவில் அதிர்ச்சி செயல்.! 

பின், கடந்த ஜூன் மாதத்தில் புற்றுநோய் கட்டி அகற்றப்பட நிலையில், சிகிச்சைக்கு பின் தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மாத்திரையும் வாங்கி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மாத்திரை தீர்ந்துவிடவே, பூதிபுரம் அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கப்பட்டுள்ளது.

அங்கு புற்றுநோய் மாத்திரையோடு இரத்த அழுத்தத்திற்கான மாத்திரையும் சேர்த்து தவறுதலாக வழங்கப்பட, அது தெரியாமல் மாத்திரைகளை உட்கொண்ட ராம்ராஜ் இறுதியில் கை-கால்கள் செயலலிப்பு பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கிறார்.

சுயநினைவின்றி அவர் இருப்பதால், உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். தவறான மாத்திரைகளை வழங்கிய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பெண்கள் முன்வைத்தனர்.

அப்போது, நிகழ்விடத்திற்கு வந்த சுகாதாரத்துறையினர் தங்களின் மீது குற்றம் இல்லை என்பதை போல, பெண்ணிடம் குரலை உயர்த்திய தோணியில் பேசிவிட்டு, பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.