Minor Girl Rape: 4 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரம்; மிட்டாய் தருவதாக தனியே அழைத்துச்சென்று கொடூரம்.!

சிறுவயதுடைய குழந்தைகளை தனியே வெளியே செல்ல அனுமதிப்பது, அவர்களின் உயிருக்கே அச்சமாகும் காலத்தில் இருக்கிறோம் என்பதால், நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

அக்டோபர் 15, பேகுசராய் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் (Begusarai, Bihar) மாவட்டம், செங்குலி பகுதியில் வசித்து வருபவர் ராம் பிரசாத் மக்தோ (வயது 30). இப்பகுதியில் நான்கு வயதுடைய சிறுமி, தனது சகோதரர் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி தனது சகோதரருடன் டியூசனுக்கு சென்றதாக தெரிய வருகிறது. அப்போது, நடுவழியில் அப்பகுதியை சார்ந்த ராம் பிரசாத், சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பதாக ஆசை காட்டி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இரத்தம் வழிந்து சிறுமி பரிதவித்து இருக்கிறார். சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு கயவன் அங்கிருந்து தப்பி சென்றுவிட, சிறுவன் தனது சகோதரியை காண பின்தொடர்ந்து சென்றுள்ளார். Early Morning Wakeup: அதிகாலை எழுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் தெரிஞ்சிக்கோங்க.! 

அண்ணனை கண்டதும் தங்கை அழவே, உடனடியாக அவரை சிறுவன் வீட்டிற்கு அழைத்து வந்து நடந்ததை கூறி இருக்கிறான். உண்மையை உணர்ந்துகொண்ட பெற்றோர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே, ஊர் மக்களுக்கு விஷயம் தெரியவந்து, அவர்கள் ராம் பிரசாத்தை அடித்து நொறுக்கினர். அவரின் வீடும் சூறையாடப்பட்டது. பின் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்வு இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ராமை கைது செய்தனர்.

படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் ராம் பிரசாத் கைது செய்யப்படுவார். சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை காவல் துறையினர் உறுதி செய்தனர்.