Wake Up Morning (Photo Credit: Pixabay)

அக்டோபர் 15, சென்னை (Health Tips): தினமும் இரவில் உறங்கி விட்டு, நாம் அதிகாலை (Wake up Morning) நேரத்தில் எழுந்திருப்பது பல நன்மைகளை வழங்கும். அதிகாலை எழுவது என்பது பலருக்கும் இயலாத காரியமாக இருந்தாலும், அதனை இயற்றினால் சாதனை நிச்சயம்.

இன்றாவது விரைவில் அதிகாலை எழுந்திருக்கலாம் என அலாரம் வைத்து தூங்கும் (Sleeping) பலரும், அதனை நொடியில் அணைத்து விட்டு தூங்கி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் எழுவது அந்நாளினை சிறப்பாக நகர்த்த உதவி செய்யும்.

அதேபோல, நமது வேலைகளை செய்ய அதிக நேரமும் வழங்கப்படுவதால், நமது வேலைகள் தங்குதடையின்றி நடந்து முடிந்து, உடலுக்கும்-மனதுக்கும் நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் அதிகாலையில் எழுந்து கொள்வதால் மன அழுத்தம் குறையும். Church Father Cheating: மனஅமைதியை தேடிவந்த பெண்ணை சீரழித்து, பணம் பறித்த பாதிரியார்; தனியார் பள்ளி ஆசிரியைக்கு நடந்த கொடுமை.! 

அன்றைய நாட்களில் வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்தி முடிக்கலாம். உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவதால், உடலுக்கு நல்ல பலன் தரும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் பருமன் வெகுவாக குறைக்கப்படும்.

சர்க்கரை நோய் வரும் அபாயமும் குறையும். இரவு நேரத்தில் 9, 10 மணிக்கு தானாக உறக்கம் வரும் என்பதால், சரியான நேரத்தில் நாம் தூங்க உதவி செய்யும். இது மன அழுத்தம், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். வளர்சிதை மாற்றத்தையும் சீர்படுத்தும்.

காலை நேரத்தில் தூய்மையான ஆக்சிஜன் (Oxygen) நல்ல பலனை வழங்கும். தூய்மையான ஆக்சிஜன் நுரையீரலை வலுப்படுத்தும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விலக்கி வைக்கும். அதிகாலை 04:30 மணி முதல் 05:30 மணிக்குள் மூச்சு பயிற்சி, யோகா செய்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.

அதிகாலை சரியான நேரத்தில் எழுதுவதால் உடலில் இருக்கும் கழிவுகள் விரைந்து வெளியேற்றப்பட்டு, பெருங்குடல் சீராக இயங்கும். உடல் நலனுக்கும் - மன நலனுக்கும் நல்லது.