HC On Husband's Impotency and Wife: கணவருக்கு ஆண்மைக்குறைவு இருந்தால் மனைவி தனியாக இருக்கலாம், ஜீவனாம்சம் கோரலாம் - நீதிமன்றம் தீர்ப்பு.!
தம்பதிகளின் திருமண வாழ்க்கைக்கு பின்னர் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களில் குறைபாடுகள் இருந்தால், அவை ஒட்டுமொத்த வாழ்க்கையின் நலனையும் கேள்விக்குறியாக்கும்.
ஜனவரி 25, ராய்ப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்திற்கு முன்னதாக கணவருக்கு மேற்கொண்ட உடல் நலப் பரிசோதனையில் அவர் ஆண்மை தன்மை அற்றவர் அல்லது மனைவியுடன் உடலுறவு கொள்ள இயலாத நிலையில் உள்ளவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிவிக்காமல் சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரின் வாழ்க்கை நடந்து வந்துள்ளது.
ஆண்மைகுறைவால் குடும்பத்தில் வந்த பிரச்சனை: ஒரு கட்டத்தில் பெண்மணி தான் தனியாக இருக்க விருப்பப்படுவதாக தெரிவிக்க, அதற்கு கணவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். பெண் தனது குடும்ப செலவுகளுக்காக கணவரிடம் பணம் கேட்க, அவர் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெண்மணி ஜாஸ்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான மனுவில் தனது கணவர் ஆண்மையற்றவராக இருந்த நிலையில், அவருடன் குடித்தனம் நடத்தி வந்த சூழலில் தற்போது நான் தனியாக இருக்கிறேன். எனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று கூறியுள்ளார். 11,12th Practical Exam: 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவிப்பு… செய்முறை தேர்வு தேதி வெளியீடு..!
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு: இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணை நடத்திவிட்டு மாதம் ரூ.2000 தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டிருக்கின்றனர். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், கணவரின் ஆண்மையின்மை மனைவி தனியாக வசிக்க போதுமான காரணம். இந்த சூழ்நிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 125 CrPC கீழ் பராமரிப்பு தொகை பெறவும் அவருக்கு உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் மனைவி தனித்தனியே வாழ உரிமை உள்ளது என்பதால், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்றுக்கொள்ளப்பட்டு கணவரின் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்.