ஜனவரி 25, சென்னை (Chennai): தமிழக அரசுக்கு இயங்கி வரும் பள்ளிகளில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் மாணவர்கள் பொதுத் தேர்விற்கு முன் எழுதக் கூடிய செய்முறை தேர்விற்கான தேதியை தேர்வுத் துறை இயக்குநரகம் தற்பொழுது வெளியிட்டு இருக்கின்றது. Four People Drown At Phillip Island Beach: ஆஸ்திரேலியாவில் பரபரப்பு... 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!
அதன்படி, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 24 ஆம் தேதியில் முடிவடைகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 12 இல் தொடங்கி பிப்ரவரி 17 இல் முடிய உள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் முதல் தேதியில் தொடங்கி அதே மாதத்தின் 22 ஆம் தேதியில் முடிவடைகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 4 இல் தொடங்கி அதே மாதம் 24 இல் முடிய உள்ளது.