CISCE ISC Exam Results 2024: சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் படித்த 10, 12 ம் வகுப்பு மாணவர்களான தேர்வு முடிவுகள் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உட்பட பல தகவலை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

CISCE Logo (Photo Credit: Wikipedia)

மே 06, மும்பை (Mumbai): இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான (Council for the Indian School Certificate Examinations) கவுன்சில் சங்கம் சார்பில் நடத்தப்படும் சிஐஎஸ்சிஇ தேர்வுகளில், ஐசிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 06, 2024 இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. Woman Deliveries 5 Babies: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி; தாய்-சேய் நலம்.! விபரம் உள்ளே.!  

cisce.org மற்றும் results.cisce.org ஆகிய இணையப்பக்கங்களில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி நிறைவுபெற்றது, 2ம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 3ல் தொடங்கி நிறைவுபெற்றது. தற்போது இரண்டு தேர்வுகளுக்கான முடிவுகளும் ஒரேநாளில் வெளியாகிறது.

தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி? தேர்வெழுதிய மாணவர்கள் மேற்கூறிய இணையதளங்களில் ஏதேனும் ஒன்றால் உள்நுழைந்து, தங்களின் தேர்வு பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். உங்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு முடிவுகள் குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்படும். உங்களின் மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.