மே 03,கிஷன்கஞ்ச் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மாவட்டம், பீகார் - மேற்கு வங்கம் மாநில எல்லையை ஒட்டியுள்ள பொதியா பகுதியை சேர்ந்தவர் (Bihar Woman Deliveries 5 Babies) தகிரா பேகம் ஆலம் (வயது 27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆலத்துக்கு, கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதி செய்யப்பட்ட கர்ப்பிணி பெண், 5 பெண் குழந்தைகளை ஈன்றெடுத்தார். Minor Boy Died: அந்தரங்க உறுப்பில் கிரிக்கெட் பந்து பட்டு 11 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!
5 குழந்தைகளுடன் தாயும் நலமுடன் இருக்கிறார்: பெண்மணி கருவுற்ற பின்னர் நடந்த சோதனையில், 5 குழந்தைகளை அவர் சுமந்துகொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை அவரிடமும் மருத்துவர்கள் தெரிவிக்க, முதலில் பெண் பயந்தாலும் பின் மருத்துவர்கள் அவரிடம் அறிவுரை மற்றும் விழிப்புணர்வை வழங்கியதை தொடர்ந்து 5 குழந்தைகளையும் அவர் சுமந்து வந்தார். தற்போது அவருக்கு பிரசவமும் நடந்து, 5 குழந்தைகளுடன் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு 6 வயதுடைய ஆண் குழந்தைக்கு தாயான பேகம், ஒரு பெண் குழந்தை வேண்டும் என விரும்பி இருக்கிறார். ஆனால், அவரின் அதிஷ்டத்தால் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இதனால் குடும்ப உறுப்பினர்களுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
किशनगंज में महिला ने 5 नवजात को दिया जन्म...सभी नवजात पूरी तरह से स्वस्थ#Bihar #BiharNews pic.twitter.com/37qeq4sCn6
— Zee Bihar Jharkhand () May 6, 2024