Gold Smuggling Case: காங்கிரஸ் தலைவர் சசி தரூருக்கு புதிய சிக்கல்? தங்கக்கடத்தில் வழக்கில் பிஏ கைது., அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக கவனிக்கப்படும் சசி தரூரின் தனிப்பட்ட உதவியாளர், பல இலட்சங்கள் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததால் சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Congress Leader Sashi Tharoor (Photo Credit: @HumaraBihar / @ANI X)

மே 30, புதுடெல்லி (New Delhi): வெளிநாடுகளுக்கு வேலை மற்றும் சுற்றுலா போன்ற விஷயங்களுக்கு செல்வோர், அளவுக்கு அதிகமாக தங்கங்களை வாங்கி வருவதும், இதுபோன்ற பயணிகளை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி தங்கக்கடத்தலில் ஈடுபடும் கும்பல் தங்கத்தை சுங்கவரி இன்றி இந்தியாவுக்குள் கடத்த முயற்சிப்பதும் பல ஆண்டுகளாக தொடருகிறது. இவ்வாறான கும்பலின் செயல்முறைகள் எப்படி இருந்தாலும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் எளிதில் கண்டறிந்து தங்கத்தை பறிமுதல் செய்கின்றனர். Norway Chess 2024: உலகப்புகழ்பெற்ற செஸ் வீரரை சொந்த நாட்டிலேயே தோல்வியுற செய்த ப்ரக்யானந்தா; அசத்தல் வெற்றி.! 

ரூ.30 இலட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்: இந்நிலையில், டெல்லி விமான நிலையத்திற்கு வந்த சிவ குமார் பிரசாத் என்பவர், 500 கிராம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்துள்ளார். இதனை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள், மே 29ம் தேதியான நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரூ.30 இலட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டது உறுதியானது.

அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி: அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் சிவ குமார் பிரசாத், தன்னை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூரின் (Congress leader Shashi Tharoor) நேரடி உதவியாளர் என அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குமாரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சர்ச்சை சம்பவத்தால் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் பெயரும் இழுக்கப்பட்டுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்படி விசாரணை நடந்து வருகிறது.