4-year Integrated B.Ed: 2 ஆண்டு பி.எட் படிப்புகளுக்கு அனுமதி கிடையாது... தேசிய ஆசிரியர் கவுன்சில் அதிரடி தகவல்..!

இனி 2 ஆண்டு பி.எட் படிப்புகளுக்கு அனுமதி கிடையாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

4-year Integrated B.Ed (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 11, புதுடெல்லி (New Delhi): புதிய தேசிய கல்வி 2020ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்திருந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட் (B.Ed) படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது (National Council for Teachers` Education NCTE). மேலும் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் (B.Ed) படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். அதுமட்டின்றி 4 ஆண்டு பி.எட் (B.Ed) படிப்புகளைத் தொடங்க மற்றும் வழங்க விரும்பும் கல்லூரிகள் பல்கலைக்கழக போர்ட்டல் அணுகப்பட்டவுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றன. Nayanthara's Annapoorani Removed From Netflix: அடி மேல் அடி வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார்.. அன்னபூரணி படத்திற்கு தடை..!