Nayanthara's Annapoorani Removed From Netflix (Photo Credit: @CinemaniaIndia X)

ஜனவரி 11, புதுடெல்லி (New Delhi): சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி (Annapoorani). இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பிராமண பெண்ணாக நடித்த நயன்தாரா(Nayanthara) சமையல் கலையில் எவ்வாறு தேர்ந்து தனது கனவை வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை. Earthquake hits Afghanistan: ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்... இந்தியாவிலும் உணரப்பட்ட அதிர்வு..!

அன்னபூரணி படத்திற்கு தடை: இப்படத்தில் பிராமண பெண்ணாக நடித்த நயன்தாரா அசைவ உணவுகளை சமைப்பதும் ருசித்து சாப்பிடுவதும் போன்ற காட்சிகளில் நடித்து இருப்பார். இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியான போது இந்த அளவு சர்ச்சைகள் எழவில்லை. ஆனால் இப்போது இந்த படமானது இந்திய அளவில் நெட்பிளிக்சில் ரிலீசான நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்காக அடி வாங்கி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தினை இயக்கிய ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் அக்காட்சிகளை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அது மட்டும் இன்றி அந்தக் காட்சிகளை நீக்கிய பிறகு நெட்பிளிக்சில் இப்படத்தினை பதிவிடுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அன்னபூரணி படமானது நெட்பிளிக்சிலிருந்து (netflix) நீக்கப்பட்டுள்ளது.