NEET UG Revised Results: நீட் யுஜி மறுதேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.!

தேர்வு முடிவுகளை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

NTA NEET UG Re Exam Results (Photo Credit: @ANI X / Wikipedia)

ஜூலை 01, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. 2024 - 2025ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வுகள் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 1563 மாணவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான மறுதேர்வுகளும் நடைபெற்று முடிந்தது. Gas Cylinder Price July 2024: ஜூலை 2024 மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.! 

மறுதேர்வு முடிவுகள் வெளியீடு:

இந்நிலையில், ஜூன் 01ம் தேதியான இன்று தேசிய தேர்வு முகமை சார்பில், தேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீட் யுஜி 2024-ன் கீழ், தேர்வு எழுதியவர்களின் தரவரிசை மதிப்பும் திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23 ஜூன் 2024 அன்று மறுதேர்வு நடைபெற்ற நிலையில், அவர்களுக்கான தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் https://exams.nta என்ற இணையத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் எனவும், அதன் வாயிலாக தற்போதைய மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் 1563 தேர்வர்களுக்கு மறுதேர்வு எழுத உத்தரவு பிறப்பித்து, என்.டி.ஏ-வுக்கும் அறிவுறுத்தி இருந்தது. அந்த உத்தரவுகளின்பேரில் நடைபெற்ற தேர்வில், 863 பேர் கலந்துகொண்டனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.