ஜூலை 01, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் விலை என்பது, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களால் ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், கடந்த மாதம் வரை வீட்டு உபயோகத்திற்காக சமையல் (Gas Cylinder Price) எரிவாயு விலை என்பது இந்தியாவில் எந்த விதமான மாற்றமும் இன்றி தொடருகிறது. அரசு சார்பில் மானியங்களும் நேரடியாக சமையல் எரிவாயு வாங்குவோரின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. Cuddalore Shocker: அதிமுக நிர்வாகி மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை; கடலூரில் பரபரப்பு.!
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு:
இந்நிலையில், ஜூலை 2024 மாதத்திற்கான சிலிண்டர் விலையை பொறுத்தமட்டில், வணிக பயன்பாட்டில் உள்ள சிலிண்டரின் விலை கடந்த மாதத்தில் இருந்து ரூ.31 குறைந்துள்ளது. இதனால் இன்றுமுதல் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை என்பது ரூ.1,809 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.1,840.50 க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு, இம்மாதம் ரூ.31 குறைந்து இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக கடந்த சில மாதங்களில் மட்டும் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ.151 அளவில் குறைந்துள்ளது. அதேவேளையில், இம்மாதமும் வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு விலை மாற்றம் இன்றி தொடரும்.