NEET-UG 2024 Exam Controversy: நீட் வினாத்தாள் கசிவா.? தேர்வு குளறுபடி.. தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!
நீட்' தேர்வை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜூன் 11, புதுடெல்லி (New Delhi): 2024-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. சுமார் 4,750 தேர்வு மையங்களில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். இதன் முடிவுகள் வெளியாகியிருக்கும் 2024 நீட் தேர்வில் (NEET-UG 2024 Exam) வினாத்தாள் கசிவு, அறிவிக்கப்படாத கருணை மதிப்பெண், ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் அடுத்தடுத்து ஒரே மதிப்பெண், மதிப்பெண் மோசடி, அதிகபட்சமாக 67 பேர் முழுமதிப்பெண் பெற்று முதலிடம் என அடுக்கடுக்கானப் புகார்கள் எழுந்தது. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய பல்வேறு மாநில அரசுகளும், பல்வேறு எதிர்கட்சிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றன. 2 Minor Boys Killed in a Car Accident: 14 வயதில் கார் ஓட்டும் பயிற்சி; 'கூடா நட்பு கேடாய் முடிந்த கதையாக' 2 சிறார்கள் உடல் நசுங்கி பரிதாப பலி..!
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: இந்நிலையில் தான் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. மேலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி நீதிபதிகள் விக்ரம் நாத், அசாதுதீன் அமானுல்லா அமர்வு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.