Heavy Rains In Junagadh: கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு; வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்..!
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஜூலை 23, ஜூனாகத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை (Heavy Rains) பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு (Flood) ஏற்பட்டுள்ளது. ஜூனாகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மானவதார் தாலுகாவில் தாழ்வான பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மாநில பேரிடர் மீட்பு படையினர் (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) பத்திரமாக மீட்டு, அவர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர். Parandur Airport Gets Site Clearance: பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி..!
ஜூனாகத்தில் இதுவரை 358 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஜூனாகத் மற்றும் கிர் சோம்நாத் செல்லும் ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், கனமழை காரணமாக போர்பந்தர் மற்றும் கட்ச் ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொடர் கனமழையால் சர்தார் சரோவர் நர்மதா அணை உட்பட அனைத்து முக்கிய அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூனாகத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை பத்திரமாக மீட்கும் காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.