Parandur Airport (Photo Credit: @cbdhage X)

ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): தமிழகத்தில் சர்வதேச விமான நிலையமானது மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம்: பரந்தூர் விமான நிலையம் (Parandur Airport) அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. Surya 44: வாயில் சிகிரெட்டுடன் கெத்தாக லுக் விட்ட சூர்யா; சூர்யா 44 படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!

மக்கள் போராட்டம்: இதனால் ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனிடையே டிட்கோ நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு பரந்தூர் விமான நிலையத்தின் தள அனுமதி வேண்டி விண்ணப்பித்தது. தொடர்ந்து தள அனுமதிக்கான தடையில்லா சான்றிதழை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு வழங்கியது. இந்த நிலையில் தற்போது பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்திற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தள அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து விமான நிலையத்தின் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது