Chennai Kundrathur Bab Dies (Photo Credit: YouTube)

அக்டோபர் 23, குன்றத்தூர் (Chennai News): சென்னையில் உள்ள குன்றத்தூர், மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் சம்பத் குமார். இவரின் மனைவி பிரியதர்ஷினி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. தற்போது, இவர்களுக்கு இரண்டரை வயது குழந்தை ப்ரணிகா ஸ்ரீ மகளாக இருக்கிறார். குழந்தை ப்ரணிகா ஸ்ரீ சம்பவத்தன்று மாயமாகி இருக்கிறார். வீட்டில் பிரியதர்ஷினி உறங்கிக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அப்போது, வீட்டில் இருந்து வெளியேறி மாயமான குழந்தையை அங்கும்-இங்கும் தேடி பார்த்துள்ளனர். குழந்தை வீட்டின் அருகில் இருக்கும் குட்டையில் சடலமாக மிதந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் குழந்தையின் மரணத்தை உறுதி செய்துள்ளனர். DMK MLA Passed Away: சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்.. சோகத்தில் திமுக தொண்டர்கள்.! 

குழந்தை மரணம், காவல்துறை விசாரணை:

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழந்தை வீட்டில் இருந்து வெளியேறியது எப்படி என தெரியவில்லை. பிரியதர்ஷினி உறங்கிக்கொண்டு இருந்தபோது, குழந்தை வீட்டில் இருந்து வெளியேறி குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தொடர் மழை காரணமாக குட்டையிலும் நீர் தேங்கி காணப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மழை காலங்களில் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.