ED Gives Notice to Arvind Kejriwal: டெல்லி அரசியலில் உச்சகட்ட பதற்றம்; அடுத்த டார்கெட் அரவிந்த் கெஜ்ரிவால்?.. ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.!
டெல்லியில் மாநில அரசால் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கை திட்டத்தில், அரசு பணம் ரூ.338 கோடியை முதல்வர், துணை முதல்வர் ஊழல் செய்து கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
அக்டோபர் 31, புதுடெல்லி (New Delhi): டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி (Aam Aadmi Party-AAP) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கும் - மத்திய ஆளும் (Central Govt) கட்சியான பாஜகவுக்கும் (BJP) இடையே பல அரசியல் பிரச்சனைகள் நடந்து வருகின்றன. டெல்லியிலும் (Delhi) தனது ஆட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, டெல்லியில் அம்மாநில ஆளும்கட்சியால் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான (Delhi excise policy scam) கொள்கை திட்டத்தில், அரசு பணம் ரூ.338 கோடியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal), துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (Manish Sisodia), ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் & பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் (Sanjay Singh) ஆகியோர் கொள்ளையடித்ததாக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்தது.
இதுகுறித்து நடந்த விசாரணையை தொடர்ந்து, எம்.பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு நவ.10ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, ஜாமினுக்கு போராடி வருகிறார். அவரின் ஜாமின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. Sugar Potato Benefits: கருவுறுதலில் பிரச்சனையா?.. சீசனில் கிடைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட மறந்துடாதீங்க.!
இந்நிலையில், அமலாக்கத்துறையினர் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நவம்பர் 2ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியுள்ளது. மதுபான கொள்கையில் அவருக்கும் பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி மாநில முதல்வர் மற்றும் ஆம் ஆத்மியின் கட்சி தலைமைக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் பதக் (Sandeep Patak), "பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே நோக்கம், டெல்லி மாநிலத்தின் முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியை நீக்குவது. அதற்கு அவர்கள் சட்டப்படியான முயற்சியை செய்யவில்லை.
டெல்லி மற்றும் பஞ்சாபில் அவர்கள் செய்த சட்டவிரோத முயற்சிகள் மக்களால் தோற்கடிக்கப்பட்டு. நாங்கள் குஜராத்துக்கு சென்றது பாஜகவினரால் ஏற்றுக்கொள்ளப்பட இயலவில்லை. இதனால் எங்களின் முக்கிய தலைவர்களை கைது செய்து வருகிறார்கள். பொய்யான குற்றசாட்டுகளை கொண்டு மூத்த தலைவர்களை கைது செய்வதால் கட்சி உடைந்துவிடாது" என கூறினார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)