Sugar Potato (Photo Credit: Pixabay)

அக்டோபர் 30, சென்னை (Health Tips): காய்கறிகளில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவற்றில் அதிக ஊட்டசத்துக்களை கொண்ட காய்களில் முக்கியமான ஒன்று சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

சீசன் நேரங்களில் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கில் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. இதனை சாப்பிட்டால் உடல் நலம்பெற்று, பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஈ, ஏ, பி6, சி, நார்சத்து, தையாமின், நியாசின், பொட்டாசியம், தாமிரம், புரதம், கால்சியம், ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றன. Bank Holidays November 2023: நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இவ்வுளவு நாட்கள் விடுமுறையா?.. லிஸ்ட் இதோ..! 

வைட்டமின் ஏ, வைட்டமின் பி, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உடலில் சதை & எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமாக அமைகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை சாப்பிடலாம்.

கொழுப்பு பிரச்சனையை தவிர்க்க விரும்புவோர், சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாம். வைட்டமின் பி, வைட்டமின் சி, நார்சத்து, ஆண்டி-ஆக்சிடென்ட் உடலில் இருக்கும் காயம், வீக்கத்தினை குணப்படுத்தும்.

பெண்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிட்டால், கருவுறுதலை உறுதி செய்யும். அல்சர் பிரச்சனை சரியாகும். இளமை தோற்றம் ஏற்படும். செல்களின் அழிவினை தடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கும். புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

தமிழ்நாட்டில் ஜூன்-ஜூலை மாதங்கள் முதல் அக்டோபர் மாதம் வரையில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு திரளாக கிடைக்கும். பிற பருவங்களில் அதனை காண்பது அரிது.