Money Recovered from Washing Machine: ரெய்டில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை; வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணம்.. ரூ.2.54 கோடி பறிமுதல்.!

சட்டவிரோத வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கிய நிறுவனத்தில், அதிகாரிகள் சோதனையின் போது வாஷிங் மெஷினில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

Recovered Money From Washing Machine (Photo Credit: @SachinGuptaUP X)

மார்ச் 27, புதுடெல்லி (New Delhi): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் கப்ரிகாரணியன் ஷிப்பிங் (Capricornian Shipping Logistics Pvt Ltd). இந்நிறுவனத்திற்கு டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, குறுகேஷேத்ரா ஆகிய இடங்களில் கிளைகளும் இருக்கின்றன. சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.1800 கோடி அளவில் சட்டவிரோத வெளிநாட்டு பணப்பரிவர்தனையில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. Head Master Arrest on Pocso Act: "தேர்வில் பெயிலாக்கிடுவேன்" - 5ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படம்காட்டி பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்.! 

வாஷிங் மெஷினில் இருந்தும் பணம் பறிமுதல்: இதுதொடர்பான தகவல் அறிந்த அமலாக்கத்துறை (Enforcement Directorate ED) அதிகாரிகள், நேற்று அந்நிறுவனத்திற்கு சொந்தமான வெவ்வேறு இடங்களில் திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில், மொத்தமாக ரூ.2.54 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. மேலும், இவற்றில் குறிப்பிட்ட தொகை வாஷிங் மெஷினின் உள்ளே இருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. Fake 20 Rupees Coin: ரூ.20 இலட்சம் மதிப்பிலான ரூ.20 நாணயங்கள் அச்சடிப்பு; யூடியூப் பார்த்து இளைஞர்கள் அதிர்ச்சி செயல்.! 

47 வங்கிக்கணக்குகள் முடக்கம்: காப்ரிகோர்னியன் நிறுவனத்தின் இயக்குனர்களான விஜய் குமார் சுக்லா, சஞ்சய் கோஷ்வாமி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று இருக்கிறது. சோதனையின் முடிவில் பணம் ரூ.2.54 கோடி அளவில் கைப்பற்றப்பட்டதால், மேற்படி விசாரணைக்காக இந்நிறுவனத்திற்கு சொந்தமான 47 வங்கிக்கணக்குகளும் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement