Rs 20 Fake Coin Syndicate (Photo Credit: @SachinGupta X)

மார்ச் 27, டெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள மண்டோலி, ஷாஹ்தாரா பகுதியில் ரூ.20 மதிப்புள்ள போலி நாணயங்கள் அதிகளவு உலவுவதாக டெல்லி காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதன்பேரில் ரகசியமாக நிகழ்விடத்தில் முகாமிட்ட அதிகாரிகள், ரூ.1.60 இலட்சம் மதிப்புள்ள போலி ரூ.20 நாணயத்துடன் வருகைதந்த சர்வேஷ் யாதவ், ஆகாஷ் ரத்தோர் ஆகிய இளைஞர்களை கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சித்தரும் தகவல் அம்பலமானது. Vintage Dhoni on IPL 2024: நொடியில் ஜாலம்.. வின்டேஜ் நிகழ்வுகளை நேரில் செய்து அசத்திய தோனி; பூரித்துப்போன ரசிகர்கள்., அசத்தல் காணொளி வைரல்.! 

பட்டதாரி இளைஞர்களின் அதிர்ச்சி செயல்: அதாவது, கடந்த 2023ம் ஆண்டு ஆகாஷ் ரத்தோர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிகாம் பயின்று முடித்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சர்வேஷ் யாதவ். இவர்களில் ஆகாஷ் ரத்தோர் 2023ல் இருந்து ரூ.20 போலி காயினை அச்சடித்து சந்தையில் விநியோகம் செய்து வந்துள்ளார். இவருடன் பழக்கத்தை ஏற்படுத்திய சர்வேஷ், பின்னாளில் ஆகாஷ் வாயிலாக தயாரிக்கப்படும் காயினை சந்தையில் புழங்கவிட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த கும்பல் ரூ.20 காயினை ரூ.20 இலட்சம் மதிப்பில் அச்சடித்து மக்களிடம் வழங்கி இருக்கிறது. Boy Kidnapped And Killed For ₹ 23 Lakh: 23 லட்சத்திற்காக சிறுவன் கடத்திக் கொலை.. மும்பையில் பரபரப்பு..! 

தொழிற்சாலை, இயந்திரம் என அதிர்ச்சி கொடுத்த குற்றவாளிகள்: இதற்காக டெல்லி ஷாஹ்தாரா பகுதியில் தொழிற்சாலை ஒன்றை நிறுவி, அங்கு நாணயத்தை அச்சடிக்கும் பணியும் நடைபெற்று வந்துள்ளது. இறுதியில் தற்போது அதிகளவு போலி நாணயங்கள் உலாவியது தெரியவந்து, அதிகாரிகள் நடத்திய ஏதர்ச்சையான சோதனையில் இவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையின்படி, ஆகாஷ் யூடியூப் பார்த்து போலி காயங்களை அச்சடிக்க தொடங்கியதும், அதற்காக அச்சடிக்கும் இயந்திரம் ஒன்று வாங்கி, அதை தனக்கேற்ப பிரத்தியேகமாக மாற்றிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.