UP Bulandsahar Police Station | Girl Sad File Pic (Photo Credit: @SachinGuptaUP X / Pixabay)

மார்ச் 27, புலந்த்சாஹர் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாஹர் மாவட்டம், அமியா கிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக (Bulandshahr Amiya School Headmaster) பிரதாப் சிங் (வயது 40) என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் அங்குள்ள சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரதாப், பள்ளியில் பயின்று வரும் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் 6 பேருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார். தனது செல்போனில் ஆபாச படம் வைத்து காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்தவர், இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் தேர்வில் கைவைத்து தோல்வியடைய செய்வேன் என மிரட்டியுள்ளார். Fake 20 Rupees Coin: ரூ.20 இலட்சம் மதிப்பிலான ரூ.20 நாணயங்கள் அச்சடிப்பு; யூடியூப் பார்த்து இளைஞர்கள் அதிர்ச்சி செயல்.! 

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது: தலைமை ஆசிரியரின் அதிர்ச்சி செயலால், பாதிக்கப்பட்ட மாணவிகளில் 9 வயது முதல் 13 வயதுடைய சிறுமிகள் ஒரு வாரம் கடந்தும் பள்ளிக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். முதலில் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாத பெற்றோர், பின் கண்டித்தபோது உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மொத்தமாக 12 மாணவிகள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது ஆசிரியரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க: 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான அநீதி இழைக்கப்பட்டால், குழந்தைகள் நலத்துறையின் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தால், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ரகசிய விசாரணை நடத்தி புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்வார்கள். குழந்தை திருமணத்தை தடுக்கவும் குழந்தைகள் நலத்துறையிடம் முறையிடலாம்.