A Boiler Exploded In Pharmaceutical Factory: மருந்து தொழிற்சாலையில் பயங்கரம்; தொழிலாளர்கள் 5 பேர் பலி - 14 பேர் படுகாயம்..!

Fire Explosion (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 04, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று இருக்கின்றது. இதில், அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், தொழிற்சாலை வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மருந்து தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, நேற்று மாலை திடீரென அங்கிருந்த பாய்லர் அதிபயங்கரமாக (A Boiler Explosion 5 Workers Died) வெடித்து சிதறியது. இந்த விபத்தில், அங்கு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். Benefits Of Watermelon Rind: தர்பூசணி தோலில் உள்ள பலன்கள் என்னென்ன..? – விவரம் உள்ளே..!

இதில், 14 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதன்காரணமாக, பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.