ஜூலை 21, சிவகாசி (Virudhunagar News): விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஆண்டியாபுரம் பகுதியில் மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இன்று பணியாளர்கள் வழக்கம்போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறிய நிலையில், வானுயர புகை கிளம்பி இருக்கிறது. இதனையடுத்து பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதை உணர்ந்த உள்ளூர் மக்கள், காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Trending Video: செல்போன் நம்பர் கேட்ட காய்கறி கடைக்காரர்.. செருப்பால் பதில் சொன்ன பெண்மணி.!
விபத்து குறித்த முதற்கட்ட தகவல் :
முதற்கட்டமாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருப்பதால் மீட்பு படையினரால் மேற்படி உள்ளே செல்ல இயலவில்லை. இதனால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால் உள்ளே எத்தனை பேர் சிக்கி இருக்கின்றனர்?, அவர்களின் நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. மீட்பு பணிகள் தொடரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.