ஏப்ரல் 04, சென்னை (Health Tips): கோடைவெயில் தாக்கத்தில் இருந்து விடுபட, நம்மை குளிர்விக்க சாலையோரங்களில் தர்பூசணி பழங்கள் அதிகமாக குவிந்து காணப்படுகிறது. உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்க தர்பூசணி பழம் நமக்கு உதவுகிறது. அந்தவகையில், தர்பூசணி பழத்தில் சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்துவிடுகிறோம். தர்பூசணி தோலில் (Many Benefits In Watermelon Rind To Boost Immunity) பலவிதமான பலன்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். Jewelery Stolen From Teachers House: பாடம் எடுத்த ஆசிரியை வீட்டில் நகை திருட்டு; 20 வயது வாலிபர் அதிர்ச்சி செயல்..!
தர்பூசணி தோலில் உள்ள பலன்கள்: தர்பூசணி தோலில் உள்ள வெள்ளைப் பகுதியில் இருக்கின்ற நார்ச்சத்து உடல் எடையை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவியாக இருக்கும். இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்ல பலன் அளிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தர்பூசணி தோலின் வெள்ளைப் பகுதியை உட்கொண்டால், இது வைரஸ் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும்.
மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கவும் இது உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வயதாகும் போது ஏற்படக்கூடிய தோல் சுருக்கங்களை நீக்க தர்பூசணி தோலில் உள்ள லைகோபீன், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உதவுகின்றன. தர்பூசணி தோலில் ஹல்வா, சட்னி செய்து சாப்பிடலாம். இதனை குளிர்பானமாகவும் அருந்தலாம். இதனை, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பருப்பு தக்காளி சேர்த்து வேகவைத்து சமைத்து சாப்பிடலாம்.