C V Shanmugam Confirmed For Corona: முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா... தொண்டர்கள் அதிர்ச்சி..!
முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 22, சென்னை (Chennai): கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போது 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்று பாதிப்பு மீண்டு 8 பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு (C V Shanmugam) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 2வது முறையாக கொரோனா பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த வாரம் தான் சபரிமலை சென்று வந்திருந்தார்.