அக்டோபர் 27, சென்னை (Technology News): ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி சி சீரியஸ் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. பட்ஜெட் விலையில், புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி சி75 மாடலின் தொடர்ச்சியாக, ரியல்மி சி85 ப்ரோ 5ஜி (Realme C85 Pro 5G Smartphone) ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யவுள்ளது. முக்கிய அம்சமாக 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன், 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. Bharat 6G Vision: 6G தொழில்நுட்பத்துக்கான பணிகளை தொடங்கிய இந்தியா.. அசத்தல் அப்டேட் இதோ.!
ரியல்மி சி85 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள் (எதிர்பார்ப்பின்படி):
- இதில், FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான அமோல்டு டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.
- சிப்செட்டை பொறுத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்பை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி ஆதரவுடன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன், ரூ.20,000 முதல் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தலாம்.
- இது ஐபி69 ரேட்டிங் மற்றும் மில்ட்ரி ஸ்டாண்டர்ட் 810H சான்றிதழை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நல்ல தூசி, நீர் மற்றும் ட்ராப் எதிர்ப்புத்திறனை வழங்கும்.
- இந்தியா மற்றும் வியட்நாம் மார்க்கெட்டை இலக்காக கொண்ட பெரிய பேட்டரி ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம். இந்தியாவில் ரியல்மி சி சீரியஸில், ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன், ரூ.12,999 விலையில் அறிமுகமானது. தற்போது, அதன் தொடர்ச்சியாக ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.