ஆகஸ்ட் 01, எழும்பூர் (Chennai News): தமிழக மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு உடல் நலப் பரிசோதனை முக்கியம் என்ற தலைப்பின் நாளை (ஆகஸ்ட் 2) தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினால் 'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' (Nalam Kakkum Stalin Scheme) தொடங்கப்படுகிறது. அதேபோல, பொதுமக்களுக்கு 41 வகையான அரசு சேவைகளை உடனுக்குடன் நடத்திக் கொடுக்க 'உங்களுடன் ஸ்டாலின்' (Ungaludan Stalin Scheme) திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு திட்டங்களில் உள்ள ஸ்டாலின் என்ற பெயரை நீக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்பான பெயர் மற்றும் புகைப்படங்களையும் நீக்க வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையில் விசாரணைக்கு வந்தது. Vaiko Meets CM Stalin: தமிழ்நாடு முதல்வருடன் வைகோ திடீர் சந்திப்பு.. பேசியது என்ன? பரபரப்பு பேட்டி.!
சென்னை நீதிமன்றம் உத்தரவு:
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "அரசு திட்டங்களுக்கு முதல்வரின் பெயரை பயன்படுத்தக்கூடாது. அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயரை சூட்டுவது ஏற்றுக்கொள்ள இயலாதது. அரசு திட்டத்தில் முதல்வரின் புகைப்படம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். அவரது பெயர் போன்றவை திட்டங்களில் இருக்கக் கூடாது. முன்னாள் முதல்வர்கள் பெயர் போட்டோவும் பயன்படுத்தக் கூடாது. முதலமைச்சர் என்ற பதவியைப் பயன்படுத்தி திட்டத்திற்கு பெயர் வைத்துக் கொள்ளலாமே தவிர்த்து அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் இடம்பெறக்கூடாது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உள்ள முதல்வரின் ஸ்டாலின் என்ற பெயரை நீக்க வேண்டும். இந்த விஷயம் குறித்து அரசு தரப்பு பதில் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவித்தார். இதன் வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஸ்டாலின் என்ற பெயரை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.