நவம்பர் 03, சென்னை (Technology News): ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி சி சீரியஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி சி75 மாடலின் தொடர்ச்சியாக, ரியல்மி சி85 ப்ரோ 5ஜி (Realme C85 Pro 5G Smartphone) ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம். Flying Modi Game: வைரலாகும் ஃப்ளையிங் மோடி கேம்.. உங்க போன்லயும் இருக்கா? உடனே செக் பண்ணுங்க.. உஷாரய்யா உஷாரு.!
ரியல்மி சி85 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள் (Realme C85 Pro Specifications):
- இதில், 6.8-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோல்டு டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
- இந்த ஸ்மார்ட்போனில், ரியல்மி யுஐ 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
- மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 எஸ்ஒசி சிப்செட், 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி ரோம் வரை மெமரி வசதி உள்ளது. 7000mAh பேட்டரி வசதியுடன், பேட்டரியை சார்ஜ் செய்ய 45W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
- கேமராவை பொறுத்தவரை, 50எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
- இதுதவிர, வைஃபை 5, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, டூயல் சிம், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மற்றும் IP69 Pro தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- ரியல்மி சி85 ப்ரோ ஸ்மார்ட்போன், தற்போது வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும், இதன் ஆரம்ப விலை $245 (இந்திய மதிப்பில் ரூ.21,752) ஆகும். பேரட் பர்பிள் மற்றும் பீகாக் கிரீன் வண்ணங்களில் கிடைக்கும்.