Modi Government Covid Advisory: மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: மாநில அரசுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்.!
கடந்த சில மாதங்களாக கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்கள் பூரணமாக விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் உச்சமெடுக்க தொடங்கி இருக்கிறது.
டிசம்பர் 18, புதுடெல்லி (New Delhi): சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், 2020, 21 ஆகிய ஆண்டுகளில் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி படைத்தது. கொரோனா (Corona Virus Outbreak) வைரஸின் பிடியில் சிக்கி பலரும் தங்களது இன்னுயிரை இழந்தனர். வைரஸ் பரவாமல் தடுக்க முதலில் தடுப்பூசி இல்லை என்பதால், அது சார்ந்த மரணங்களும் அதிகம் ஏற்பட்டன. தற்போது வரை கொரோனா வைரஸுக்கு உலகளவில் 6.9 கோடி மக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
3 அலைகளால் மக்கள் கடும் பாதிப்பு: இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று கொரோனா அலைகள் மக்களை வதைத்தது. இதனால் இந்தியாவில் மட்டும் 5.3 இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உட்பட கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், அதன் பரவல் கணிசமாக குறைந்து, இந்தியாவிலேயே கொரோனா இல்லாத நிலை என்றது உருவானது. Bull Attacks School Girl: பள்ளிக்கு சென்ற சிறுமியை முட்டிதூக்கிய காளை: சாலையோரம் நின்று நொடியில் அதிர்ச்சி செயல்.!
மீண்டும் (திரும்ப வந்துட்டேன் சொல்லு பாணியில்) கொரோனா: கேரளவில் மரபணு மாற்றமடைந்த கோவிட் 19 ஜெஎன்1 (COVID 19 JN.1 Variant) கொரோனா பரவி வருவது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ஐயப்ப பக்தர்களுக்கும் இது பெரும் தலைவலியாகியது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை அம்மாநில அரசு தொடர்ந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசு அறிவுறுத்தல்: இந்நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி, மரபணு மாற்றம் அடைந்த கொரோனா ஜேஎன்1 ரகம் தொடர்பான விஷயத்தில் மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும். மாநில வாரியாக மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். Salaar Part 1 Ceasefire Trailer: ஆக்சனில் மிரட்டும் பிரபாஸ்.. சலார் படத்தின் புதிய டிரைலர் இதோ.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு.!
ஆர்டிபிசிஆர் சோதனை: தேவைப்படும் இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி கொரோனா மாதிரிகளை சேகரிக்கவும், கொரோனா பாதிப்படைந்தவர்களுக்கு மரபணு சோதனை தேவைப்பட்டால் அது சார்ந்த ஆய்வகங்களுக்கு உடனடியாக மாதிரிகள் அனுப்பப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிசிஆர் மற்றும் ஆர்டிபிசி பரிசோதனைகளை அதிகளவில் எடுக்கவும் மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.