Tamilnadu Farmers Protest in Delhi: செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்; பரபரப்பாகும் டெல்லி வட்டாரம்.!
தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சார்பிலும் பலகட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 24, புதுடெல்லி (New Delhi): விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உட்பட பல்வேறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள், மத்திய அரசுக்கு தங்களின் கோரிக்கையை காண்பிக்கும் பொருட்டு போராட்டம் நடத்துவதாக அழைப்பு விடுத்து இருந்தனர். டெல்லியின் எல்லைப்பகுதியில் ஏற்கனவே பல மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கையுடன்போராட்டம் நடத்தி வந்த நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமும் தங்களின் தரப்பு கோரிக்கைகையுடன் போராட்டம் நடத்துகிறது. மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த இன்று முதல் 30ம் தேதி வரை அனுமதி கோரப்பட்டது. US Warning to Pakistan: பாலிஸ்டிக் ஏவுகணை, ஈரானுடன் பேச்சுவார்த்தை என சர்ச்சையில் சிக்கும் பாகிஸ்தான்; அமெரிக்கா கடும் எச்சரிக்கை.!
செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம்: ஆனால், இன்று ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஜந்தர் மந்தர் பகுதியில் முகாமிட்டு இருந்த தமிழ்நாடு விவசாயிகள், மரத்தடியில் அமர்ந்து இருந்தனர். அச்சமயம் அங்கு வந்த துணை இராணுவ அதிகாரிகள், உங்களுக்கு நாளை போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள காரணத்தால் புறப்பட்டு செல்லுமாறும், இங்கு தங்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் தரப்பு அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கவே, அதிகாரிகள் - விவசாயிகள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் விவசாயிகள் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.