Pakistan Flag | US Flag (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 24, வாஷிங்க்டன் டிசி (World News): கடந்த சில ஆண்டுகளாகவே நிலையில்லாத ஆட்சி-அதிகாரம், பொருளாதார பிரச்சனை, உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழல், பணவீக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் (Pakistan) நாடு பரிதவித்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபராக பணியாற்றிய இம்ரான் கான் (Imran Khan) மற்றும் அவரது மனைவியின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஷநபாஸ் செரீப் (Shehbaz Sharif) அந்நாட்டின் பிரதமராக தேர்தலுக்கு பின் வெற்றிபெற்று பணியாற்றி வருகிறார்.

கண்டம்விட்டு (Ballistic Missile) கண்டம் பாயும் ஏவுகணை: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை போல, அங்கு நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. ஆட்சி மாற்றத்தினால் தொடர் பதற்ற சூழல் நிலவி வருகிறது, பாதுகாப்பு படையினரை எதிர்த்து தாக்குதல்களும் முன்னெடுக்கப்படுகிறது. இதனிடையே, பாகிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தொழில்நுட்பத்தை பெலாரஸ் மற்றும் சீனா நாட்டில் செயல்படும் நிறுவனங்கள் வழங்கியதாக தெரியவருகிறது. HBD Sachin Tendulkar: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கோடானகோடி ரசிகர்களின் உத்வேக நாயகன், சச்சின் டெண்டுலருக்கு இன்று பிறந்தநாள்.! 

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை நிதி நிறுத்தம்: இந்த குற்றசாட்டை உறுதி செய்த அமெரிக்கா (US Govt), பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில்நுட்பங்கள் வழங்கும் நிறுவனங்களை கண்டித்து. மேலும், அந்நிறுவனங்களுக்கு உலகளவில் செயல்படவும் தடை விதித்துள்ளது. பாலிஸ்டிக் ரக ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானுக்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்கா பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க வழங்கி வந்த நிதியும் முன்னாள் அதிபர் ட்ரம்பால் (Donald Trump) நிறுத்தப்பட்டது.

திணறும் பாகிஸ்தான் அரசு: அமெரிக்கா வழங்கிய பல மில்லியன் கணக்கான நிதியை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சி எடுக்காத காரணத்தால் நிறுத்தப்பட்ட நிதியை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சீரழிவு, தொடர்ந்து அந்நாட்டை வாட்டி வதைத்து வருகிறது. சர்வதேச அளவிலான பல தடைகளும் விதிக்கப்பட்டதால், பாகிஸ்தான் அரசு தற்போது வரை திணறி வருகிறது. Speeding Bus Hits Bike: பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரைவிட்ட இருசக்கர வாகன ஓட்டி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! 

ஈரான் (Iran Govt), பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: இந்நிலையில், கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு உறுதுணையாக இருந்த நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தற்போது ஈரானுடன் சமூகமான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் ஈரானுடன் எந்த விதமாக வணிகமும் பாகிஸ்தான் செய்யக்கூடாது. மீறி வணிகரீதியாக பாகிஸ்தான் - ஈரான் இணையும் பட்சத்தில், ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை முதன்மை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் உறுதி செய்துள்ளார்.