Stray Bull Attack Death: 43 வயது நபரை முட்டித்தூக்கி, கொடுரமாக தாக்கி கொலை செய்த காளை; பொய்த்துப்போன உயிர்காப்பு முயற்சிகள்.!

சாலைகளில் கேட்பாரற்று திரியும் காளை மாடுகளின் ஆவேச தாக்குதல், அப்பாவி மனிதர்களின் உயிரை பறித்து வரும் சோகம் டெல்லியில் அவ்வப்போது நிகழ்கிறது.

Delhi Cow Attack on 23-04-2023 (Photo Credit: @SachinGuptaUP X)

பிப்ரவரி 24, டெல்லி (Delhi Crime News): புதுடெல்லியில் உள்ள திக்ரி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் குமார் ஜா (வயது 43). இவர் சம்பவத்தன்று தனது மகனை பேருந்து நிலையத்திற்கு கொண்டுசென்று விட்டுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அச்சமயம், அங்கிருந்த சாலையோரத்தில் அவர் நடந்துவர, அங்கு சுற்றிக்கொண்டு இருந்த மாடு திடீரென மூர்க்கமாகியுள்ளது. மேலும், சுபாஷ் குமார் ஜாவை (Bull Attack) கடுமையாக எட்டி உதைத்து தாக்கி இருக்கிறது. D50 Raayan Update: மிரட்டலான லுக்… தனுஷ் நடிப்பில் உருவாகும் ராயன் படத்தில், பிரகாஷ் ராஜின் அசத்தல் கிளிக்ஸ் இதோ.! 

நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து பலி: இந்த சம்பவத்தில் சுபாஷ் குமார் ஜா நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரால் மாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இயலவில்லை. இன்று காலை, 42 வயதான சுபாஷ் ஜா தனது மகனை தெற்கு டெல்லியின் திக்ரி பகுதியில் இறக்கிவிட பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். மாடு அவரை மிதித்து கொன்றது. அங்கிருந்தவர்கள் ஜாவை காப்பாற்ற எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. மாடு தொடர்ந்து அவரை தாக்கியது. Calls will be Monitored by the Govt? மக்களின் செல்போன்களை உளவு பார்க்கும் மத்திய அரசு?.. வைரலாகும் தகவலின் உண்மை பின்னணி என்ன?.! 

பதைபதைப்பு காட்சிகள் வைரல்: ஒருவழியாக மாட்டின் பிடியில் இருந்து ஜாவை மீட்ட பொதுமக்கள், காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தி குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஜாவின் உயிரிழப்பை உறுதி செய்தனர். பின் இதுதொடர்பாக அவரின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்த பதைபதைப்பு காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன.