Scam Message (Photo Credit: @PIBFactCheck X)

பிப்ரவரி 23, புதுடெல்லி (New Delhi): தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, நமது கையில் உலகை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இந்த வளர்ச்சியை சரியாக பயன்படுத்தும் நபர்கள் தொடர்ந்து முன்னேற்றத்தின் பாதையில் அழைத்து செல்லப்படுகின்றனர். ஆனால், அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றி, மக்களின் அறியாமையை பயன்படுத்தும் நபர்கள் செய்யும் மோசடி செயல்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.

போலியான தகவலால் உண்டாகும் பிரச்சனைகள்: கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. அந்த திட்டங்களை சில நேரம் எதிர்க்கட்சிகள் நகையாடுவதும், போலியான தகவலை கூறி மக்களிடையே பரபரப்பை உண்டாக்குவதும் தொடர்ந்து வருகிறது. IND Vs ENG Test: ரன்களை குவிக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து; மதியத்திற்குள் 5 விக்கெட் காலி.. புதிய சாதனை படைத்த அஸ்வின்.. விபரம் உள்ளே.! 

அரசு யாரின் செல்போனையும் உளவுபார்க்கவில்லை: இந்நிலையில், மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய தொலைத்தொடர்பு கொள்கையின் வாயிலாக, அரசு ஒவ்வொரு தனிநபர்களின் சமூக வலைதள கணக்குகளையும், செல்போன் அழைப்புகளையும் உளவு பார்ப்பதாக செய்தி ஒன்று வைரலாகி வந்துள்ளது. இதனை கவனித்த அரசுத்தரப்பு, போலியான செய்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளது. மேலும், இவ்வாறான போலியான தகவலை பகிர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.