Cop Dragging Girl Protester: பெண்ணை பிடிக்க தலைமுடியை இழுத்து கீழே தள்ளிய காவலர்கள்; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை கைது செய்ய முயற்சித்து 2 அதிகாரிகள் சர்ச்சையில் சிக்கிக்கொண்டனர்.
ஜனவரி 25, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு, ரங்காரெட்டி மாவட்டத்தில் உயர்நீதிமன்றம் அமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தது. நீதிமன்றம் அமைக்க தேவையான நிலத்திற்காக, பல்கலைக்கழகத்தின் பெயரில் இருக்கும் 100 ஏக்கர் நியதினை பயன்படுத்தவும் திட்டமிட்டு இருந்தது. இந்த தகவலை அறிந்த வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களின் பல்கலைக்கழகத்திற்க்கு உட்பட்ட நிலத்தில் நீதிமன்ற வளாகம் அமைக்கப்படக்கூடாது. வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிலம்தான் முக்கியம். அதனை பறிப்பது அபத்தன்மைத்து என எதிர்ப்பு குரலெழுப்பி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு செயல்பட்டு வந்ததாக தெரியவருகிறது.
காவல் அதிகாரிகளின் அதிர்ச்சி செயல்: சம்பவத்தன்று நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து ஏபிவிபி அமைப்பை ஆதரவை கொண்ட மாணவர்கள் ஓட்டம்பிடித்தனர். 20 பேரை அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டில் வாய்த்த நிலையில், நிகழ்விடத்தில் இருந்து தப்பியோடியவர்களையும் வாகனங்களில் விரட்டி சென்றனர். அச்சமயம், கல்லூரி மாணவர் ஒருவரும் காவல் துறையினரால் துரத்தி செல்லப்பட்டார். கல்லூரி மாணவி சாலையில் ஓடிய நிலையில், அவரை துரத்தி இருசக்கர வாகனத்தில் வந்த பெண் காவலர்கள் மாணவியை தடுத்து நிறுத்துவதாக நினைத்து அதற்கான முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த பெண் காவலர், மாணவியின் தலை முடியை பிடித்து இழுத்தார். இதனால் மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்தார். Arutperunjothi Vallalar Dharsan: அருட்பெருஞ்ஜோதியாக காட்சி தந்த வள்ளலார்; பரவசத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள்.!
எதிர்க்கட்சியின் கண்டிப்பும், காவல்துறையின் விளக்கமும்: இந்த விஷயம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்டனத்தை ஏற்படுத்தவே, தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள், பிஆர்எஸ் கட்சியின் தலைவர் கவிதா கல்வகுந்த்லா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். அதேவேளையில், ஊரடங்கின்போது பிஆர்எஸ் ஆட்சி நடைபெற்றசமயத்தில், காவல் துறையினர் நடந்துகொண்ட ஒருசில அணுகுமுறையையும் பலர் தேடிப்பிடித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த விஷயம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். சர்ச்சை சம்பவம் குறித்து பதில் அளித்துள்ள ஹைதராபாத் காவல் துறையினர், "இதுபோன்ற விவகாரம் வருந்தத்தக்கது. இருவருக்கும் எந்த விதமான முன்பகையும் இல்லை. அவரை பிடிக்க முயற்சித்தபோது நடந்த சம்பவம் துரதஷ்டவசமானது. பெண்மணியின் சார்பில் புகார் அளிக்கப்படவில்லை, மேற்படி விசாரிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளது.